பொள்ளாச்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கொரோனா பரிசோதனை மையத்திற்கு சீல் வைப்பு - நகராட்சி நகர் நல அலுவலர்கள் நடவடிக்கை..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கொரோனா பரிசோதனை மையத்திற்கு சீல் வைத்து, நகராட்சி நகர் நல அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கொரோனா பரிசோதனை மையத்திற்கு சீல் வைத்து, நகராட்சி நகர் நல அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு அங்கீகாரத்துடன் அரசு மற்றும் தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைத்து நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பொள்ளாச்சி புதிய திட்ட சாலையில் உரிய அனுமதி இல்லாமல் தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருமவதாகவும், அங்கு வழங்கப்படும் பரிசோதனை முடிவுகள் முறையாக இல்லை எனவும் பொதுமக்கள் பொள்ளாச்சி நகர் நல அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.



இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் ஆய்வுக் கூடம் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதும், அவர்கள் எடுக்கும் சளி மற்றும் இரத்த மாதிரிகள் அனைத்திற்கும் ஊர்ஜிதமான பரிசோதனை முடிவுகளை வழங்குவதில்லை எனவும் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பரிசோதனை மையத்தில் பயன்படுத்தக்கூடிய மருந்துகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் குவித்து வைத்திருப்பது தெரிய வந்தது.



பின்னர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள் பரிசோதனை மையத்திற்கு சீல் வைத்தனர். பொள்ளாச்சி பகுதியில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் உரிய அனுமதி இல்லாமலும் பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருவதால், அவைகளைக் கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...