கோவை: வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சோதனைச்சாவடிகள் அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வருவாய்த்துறை, காவல்துறை நகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகளை அமைத்து தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, யாரும் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேபோன்று, வெளிநபர்களும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, உள்ளே நுழையக்கூடாது என்றும் தீவிர கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

அதேபோல நகர்பகுதியில் காவல் துறையினரும் தற்காலிக தடுப்புகள் அமைத்து அவசியமின்றி உலாவருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியும் துரித கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.