வால்பாறையில் வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

கோவை: கோவை வால்பாறை தேயிலைத் தோட்டத்தின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் வீடுகள் சேதமடைந்தன.


கோவை: கோவை வால்பாறை தேயிலைத் தோட்டத்தின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் வீடுகள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னிமேடு தேயிலைத் தோட்டம் இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கான குடியிருப்புகள் தேயிலைத் தோட்டப் பகுதியிலேயே வரிசை வீடுகளாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேயிலைத் தோட்டத்தின் இரண்டாம் பிரிவில் பணியாற்றி வருபவர்கள் ராஜாம்பாள், கண்ணம்மாள் இவர்களுடைய குடியிருப்புகளை இன்று அதிகாலையில் 7 காட்டு யானைகள் முற்றுகையிட்டன.



வீட்டின் முன்புறம் உள்ள ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்து வெளியே தூக்கி வீசி சேதப்படுத்தின. காட்டு யானைகள் வந்ததை அறிந்த ராஜாம்பாள், கண்ணம்மாள் இருவரும் பின்பக்கம் வழியாக ஓடி உயிர் பிழைத்தனர்.

தகவலறிந்து வந்த தேயிலைத் தோட்டக் காவலர்கள் காட்டு யானைகளை விரட்டி, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் நிற்பதால், மீண்டும் இரவு வரலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...