கிணத்துக்கடவில் திமுக இளைஞரணி சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள இம்மிடிபாளையத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள இம்மிடிபாளையத்தில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் தலைமையிலும் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



பின்னர் தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஞானசேகரன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கனகவேல், ஊராட்சி வார்டு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பெரியார் மணி, கிளைச் செயலாளர் ஐயப்பன், பிரதிநிதி முருகேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், தேவராடிபாளையம் செந்தில்குமார், லட்சுமி நகர் நாகராஜ், அருண், இளைஞா் அணி பாரதி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனா்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...