கோவை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரே வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் தொடர் ரத்ததானம் செய்து வருகின்றனர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரே வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் தொடர் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மனித நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கர்ப்பினி பெண்கள் மற்றும் இதய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படுகிறது. பெருந்தொற்று காலம் என்பதால் யாரும் வெளியே வருவதில்லை. குறிப்பாக மருத்துவமனை பக்கமே வருவதில்லை.
இதனை உணர்ந்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியை அணுகி ரத்த தானம் செய்கிறோம் என தெரிவித்து கடந்த மூன்று நாட்களாக, வாலிபர் சங்கத்தினர் நாள் ஒன்றிற்கு ஐந்து பேர் வீதம் ரத்ததானம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (3.6.2021) DYFI பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு சார்பாக இரத்த தானம் செய்தனர்.

இந்த இரத்த தானம் நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ந. ராஜா, இரத்த தான குழு ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.