பார்க் கல்வி குழுமம் - கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் அர.சக்கரபாணி திறப்பு..!

கோவை: கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் 50 ஆண்டுகளாக கல்விச் சேவை செய்து வரும் பார்க் கல்வி குழுமம் தங்களது வளாகங்களை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளார்கள். கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.


கோவை: கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் 50 ஆண்டுகளாக கல்விச் சேவை செய்து வரும் பார்க் கல்வி குழுமம் தங்களது வளாகங்களை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளார்கள். கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.

பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், முனைவர் அனுஷா ரவி கூறும்போது, ‘‘இந்த பேரிடர் காலத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள போதிய வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக கருமத்தம்பட்டியில் உள்ள அவர்களது கல்லூரி வளாகங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளோம்'' என்று தெரிவித்தார்.



நேற்று 350 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அர.சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த விழாவில் கல்லூரி தலைவர் முனைவர். P.V.ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர், முனைவர் அனுஷா ரவி கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய, முனைவர் அனுஷா ரவி, ‘‘மக்களின் நலனுக்காக கணியூர் பேரூராட்சி மற்றும் மாதப்பூர் ஊராட்சி மக்களின் வசதிக்காக 30 படுக்கை வசதி கொண்ட இரண்டு மையங்களை கணியூர் பார்க் குளோபல் பள்ளி (CBSE) வளாகத்தில் அமைத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...