கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி, ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி 98வது வட்டத்தில் அரசன் தியேட்டர் முன்பு தெற்கு பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் இ.நிசார் அகமது ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கேக் வெட்டியதோடு, திமுக கொடியேற்றி ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் குறிச்சி தெற்குப்பகுதி பொறுப்பாளர் இரா.கார்த்திகேயன், வட்டக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.