திருச்சியில் விடுமுறை கிடைக்காததால் கோவிட் பரிசோதனை செய்துவிட்டு உடல்நலக்குறைவோடு தொடர் பணியில் ஈடுபட்ட காவலர் உயிரிழப்பு!

திருச்சி: திருச்சி ஆயுதப்படையில் காவலராக இருக்கக்கூடிய காவலர் கோவிட் டெஸ்ட் எடுத்துவிட்டு உடல்நலக்குறைவோடு விடுமுறை கிடைக்காததால் தொடர் பணியில் இருந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி: திருச்சி ஆயுதப்படையில் காவலராக இருக்கக்கூடிய காவலர் கோவிட் பரிசோதனை எடுத்துவிட்டு உடல்நலக்குறைவோடு விடுமுறை கிடைக்காததால் தொடர் பணியில் இருந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா அருள் ( 35 ). இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் துவாகுடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுக்குடி சோதனை சாவடியில் பணி வழங்கப்பட்டிருந்து.

இதனையடுத்து, நேற்று உடல்நிலை சரியில்லை காரணத்தினால் விடுமுறை வேண்டுமென்று ஆயுதப்படை உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு தற்போது திருவெறும்பூர் டிஎஸ்பி பொறுப்பில் உங்களை பணியமர்த்தி உள்ளதாகவும், அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காவலர் வோஸ்வா அருள் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் அவர் இன்று விடுப்பில் எடுத்துள்ளார். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்று தெரிவித்ததால் அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி தேவராயநேரி அடுத்த புதுக்குடி சோதனைச் சாவடி பணிக்கு வந்த ஜோஸ்வா அருள் சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக சக காவலர்கள் அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு துவாக்குடி மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோஸ்வா அருள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என விடுமுறை கேட்டு அதற்கு அனுமதி அளிக்காத அதிகாரிகளால் தற்போது ஒரு காவலர்கள் மத்தியில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காலத்திலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு ஏ.பி.சி என்ற சுழற்சி முறையில் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், திருச்சி மாவட்டத்தில் ஏ.பி என்ற முறையில் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் சில காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல் நிலை சரியில்லாத நிலை ஏற்படுவதாகக் காவலர்கள் தெரிவிக்கின்றனர். காவலர் உயிரிழந்தது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...