கோவை மாவட்ட ஊரக பகுதியில் 3 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் - மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தற்போது 59 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தற்போது 59 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 241 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு 3 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சூலூர் வட்டாரத்தில் 21 மையங்களில் 220 படுக்கைகளும், துடியலூர் வட்டாரத்தில் 14 மையங்களில் 458 படுக்கைகளும், மதுக்கரை வட்டாரத்தில் 17 மையங்களில் 360 படுக்கைகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 39 மையங்களில் 387 படுக்கைகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 27 மையங்களில் 293 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

காரமடை வட்டாரத்தில் 34 மையங்களில் 81 படுக்கைகளும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 18 மையங்களில் 207 மையங்களும், ஆனைமலை வட்டாரத்தில் 8 மையங்களில் 175 படுக்கைகளும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் 21 மையங்களில் 310 படுக்கைகளும், அன்னூர் வட்டாரத்தில் 20 மையங்களில் 127 படுக்கைகளும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 13 மையங்களில் 241 படுக்கைகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 9 மையங்களில் 142 படுக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் துடியலூர் வட்டாரத்தில் ஒருவரும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 5 பேரும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 23 பேரும், ஆனைமலை வட்டாரத்தில் 30 பேர் என மொத்தம் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இல்லாதவர்கள் மட்டுமே இந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...