கோவை: கோவை தொண்டாமுத்தூரில் இருந்து கேரளாவிற்கு இரண்டரை டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்துள்ள வண்டிக்காரனூர். இந்தப் பகுதியில் மினி டெம்போ மூலம் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு டெம்போ வாகனம் சென்றது. உடனடியாக அந்த வாகனத்தை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் இரண்டரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வேலன்தாவளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் 24, கே.ஜி சாவடியை சேர்ந்த வல்லரசு 21, சுந்தராபுரம் தைச் சேர்ந்த கமலேஷ் 19 என்பதும் தொண்டாமுத்தூர் பகுதிக்கு வாகனத்தில் வந்த இவர்கள் கெம்பனூர் குப்பேபாளையம் வண்டிக்காரன் ஆகிய இடங்களில் சென்று ரேஷன் அரிசியை வாங்கிக் கொண்டு கேரளாவிற்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கேரளா பதிவு எண் கொண்ட டெம்போவையும், மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.