கோவை: வால்பாறை சோலையார் டேமில் கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சமுதாய விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

வால்பாறையை அடுத்த சோலையார் டேம் இடதுகரை பகுதியிலுள்ள பிரண்ட்ஸ் ஆப் சோலையார் டேம் மற்றும் சமூக சமுதாய விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சோலையார் டேம் மருத்துவமனை டாக்டர் சதீஷ் குமார் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், சோலையார் டேம் பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை எடுக்கவும் இப்பகுதியில் சுகாதார ஆய்வு மேற்கொள்ளவும் இறந்தவர்களுக்கு உடனடியாக இறப்புச் சான்றிதழ் வழங்கவும் கிருமி நாசினி தெளிக்கவும் பிளீச்சிங் பவுடர் போடவும் வாரம் ஒரு முறை கபசுர குடிநீர் வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற மருத்துவர் நிறைவேற்றி தருவதாக தருவதாக உறுதி அளித்துள்ளார். தற்போது சோலையார் டேம் பகுதியிலே 108 ஆம்புலன்ஸ் வசதி இக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.