கோவை: நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 32,417 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள விவரம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின்(CAPA) தலைவர் ரவிசங்கர், ‘‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்தேன்.
ஈரோடு மண்டலத்தை தவிர, அனைத்து மண்டலங்களும் தகவல் தெரிவித்துள்ளன. இதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 32,417 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள விவரம் தெரியவந்துள்ளது. காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பக் கோரி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களுடன் கடிதம் எழுதியுள்ளோம். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பினால் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை குறைவதுடன் மின்வாரிய பணிகள் காலதாமதமின்றி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.