தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூன்.4-ல் ஆர்ப்பாட்டம்... பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தகவல்..!

கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கொரோனா தடுப்பூசி போதுமான அளவு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூன்.4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கொரோனா தடுப்பூசி போதுமான அளவு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூன்.4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் பதவி ஏற்ற நாளிலிருந்து 25 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராமல் கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்ற பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். மருத்துவ கட்டுமானங்கள், ஆக்சிஜன் படுக்கைகள் போதுமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவைத் தடுக்கின்ற பேராயுதமான கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்கு ஆளுகின்ற பாஜக மோடி அரசு தடையாக உள்ளது.

தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவான மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை தருகின்ற மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு குறைவான தடுப்பூசிகளை கொடுத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது.

வெளிநாடுகளிலிருந்து நேரடியாக தமிழக அரசு தடுப்பூசிகளை பெறுவதற்கு உரிமை இல்லை என்று தடை விதிக்கின்றது. தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பு ஊசி உற்பத்தி தொழிற்சாலையை ஒன்றிய அரசு இயக்காமல் முடக்கி வைத்திருக்கிறது. அந்தத் தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு ஏற்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கும் அனுமதி தருவதில் காலம் தாழ்த்தி வருகிறது. கொரானா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையையும் ஏற்க மறுக்கிறது.

முதலில் தடுப்பு ஊசிகள் ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த மோடி, தற்போது மாநில அரசுகளே விலைகொடுத்து வாங்க வேண்டும் என்று ரெட்டை வேடம் போடுகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பை ஏற்று செயல்படும் மாநில அரசுக்கு உதவாமல் உரிமைகளைப் பறிக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து. (04-06-2021) வெள்ளி காலை 11 மணி அளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக இணையவழிப் போராட்டம் நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...