கோவை: கோவை காவல் துறையினர் கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடியை கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் புதூரைச் சேர்ந்தவர் தனஞ்செயன் என்ற தொட்டி ஜெயா(34), பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, கோவை போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் மட்டும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கோவை வீர கேரளத்தில் உள்ள சுடுகாட்டில் தர்மலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் தனஞ்செயன் சம்பந்தப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்தனர். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த தனஞ்செயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் நேற்று அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீஸார் கோவை மத்திய சிறையில் இன்று அதிகாரிகளிடம் வழங்கினர்.