திருப்பூர்: திருப்பூரில் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையம் உழவர் சந்தைக்குப் பின்புறமாக உள்ள ஏபிடி சாலையில் உள்ள பழைய துணிகளைப் பிரிக்கும் வேஸ்ட் குடோனில் வாலிபர் ஒருவரின் உடல் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை குறித்து விசாரணை மேற்கொண்டபோது, கொலையான வாலிபர் எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த 23 வயதான சம்சுதீன் என்பதும், காலை வீட்டிலிருந்து நண்பர்களுடன் வெளியே வந்த நிலையில் மதியம் உணவு அருந்த வீட்டிலிருந்து அழைத்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த நிலையில் சந்தேகமடைந்தவர்கள், நண்பர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சடலமாக இருந்ததாக நண்பர்கள் தெரிவித்த தகவலை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.