கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு ஆக்ஜிசன் செறிவூட்டு இயந்திரத்தை திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் வழங்கினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக அறிந்த கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஏற்பாட்டில் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜனை செறிவூட்டு இயந்திரம் இன்று வழங்கப்பட்டது.

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், ஆக்சிஜன் செறிவூட்டு இயந்திரத்தை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சண்முகப்பிரியாவிடம் வழங்கினார்.

மேலும், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த குறிச்சி பிரபாகரன், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி தர உறுதுணையாக இருப்பதாக மருத்துவர்களிடம் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கதிர்வேல், கணேஷ்குமார், தமிழ்பித்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.