கோவை: தமிழக அரசு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வை ரத்து செய்யக்கூடாது கொரோனா பெருந்தொற்று குறைந்தவுடன் எழுத்துத்தேர்வாக நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சியில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யாமல் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சியில் உள்ள மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை காரணம் காட்டி மத்திய அரசு சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் பெரும் தொற்று குறைந்தவுடன் முழு பாதுகாப்புடன் தேர்வை நடத்தி இருக்கலாம்.
அதேபோல, அகில இந்திய அளவில் நடக்கும் தகுதித் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து இருக்க வேண்டும், ஆனால் பொதுத்தேர்வை ரத்து செய்ததன் மூலம் மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகும்.

எனவே, தற்போது சென்னையில் தமிழக அரசு சார்பில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்ற முடிவு எடுக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்தவுடன் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களை ஏற்படுத்தி பாதுகாப்புடன் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.