‘கொரோனா' கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது: இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு நன்றி

கோவை: கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது என்று இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு அறிக்கை மூலம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது என்று இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு அறிக்கை மூலம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF), கன்வீனர், பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோவிட் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இப்பேரிடரை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தொழில் துறையில் இருந்து நாங்கள் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

1. சிரமமான காலகட்டங்களில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முன்னின்று வழிநடத்தும்போதும், வெளிப்படையான கருத்துகளை தொடர்ச்சியாக நம்பிக்கை அளிக்கும் விதத்தில் வெளிப்படுத்தும் போதும், அனைவருக்கும் இக்கால கட்டத்தை சமாளித்து விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படும்.

இந்த நல்ல செயல்களை தமிழக முதல்வர் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்துவது தொழில்முனைவோருக்கு நம்பிக்கை அளிக்கிறது.

2. முதல்வர் அலுவலகம் மற்றும் தொழில் அமைச்சகம் மூலம் மிகச் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் தொழில் துறைக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டத்துக்கான திட்டங்களும், தகவல் பரிமாற்றத்திலும், தொடர்ச்சியான புரிதலுடன் கூடிய ஒரு விஞ்ஞான ரீதியான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், எங்களாலும், வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்க முடிகிறது.

3. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் கேம்ப்கள் நடத்தும் முனைப்பிற்கும், சில தொழிலாளர்களின் தடுப்பூசி போடும் தயக்கத்தை போக்கியதற்கும் உதவிய தமிழக சுகாதாரத்துறை மற்றும் பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.

4. சென்ற வருடம் கற்ற பாடங்களில் இருந்து, இந்த லாக்டவுன் காலத்தில் ஆலைகளின் இயக்கத்தை நிறுத்தி இருக்கும் எங்கள் தொழிற்சாலைகளிலும் மிகச்சிறந்த திட்டங்களை வடிவமைத்து, ஆலைகளில் தங்கியிருக்கும் தமிழக மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் உட்பட அனைத்து தேவைகளையும் கவனித்து, அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

5. வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் தளர்வுகளில், உள்ளிருப்பு பணியாளர்களை வைத்து ஆலைகளை இயக்க, முதல் கட்ட தளர்வாக அனுமதித்தால் ஆலைகள் கோவிட் கட்டுப்பாடுகளுடன் இயங்க ஆரம்பிக்க முடியும்.

6. எங்கள் ஜவுளிப்பொருட்களின் மிகப்பெரிய சந்தைகளான அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தடுப்பூசிகளின் பலனால், இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதனால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், நமது தமிழக ஜவுளி ஏற்றுமதித்துறை, லாக்டவுனுக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார மீட்டெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...