கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 511 தள்ளு வண்டிகள், வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வசதியாக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடி க்கை எடுக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 600 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மளிகை பொருட்கள் வீடு, வீடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தள்ளு வண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவையில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 228 ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வீடு, வீடாக விற்பனை செய்ய 312 வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 37 பேரூராட்சிகளில் 199 நடமாடும் வாகனங்கள், தள்ளுவண்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வீடு, வீடாக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மளிகை பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.