திருப்பூரில் விதிகளை மீறிய ஆறு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல்..!

திருப்பூர்: தமிழக அரசு விதித்த கொரோனா தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


திருப்பூர்: தமிழக அரசு விதித்த கொரோனா தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழக அரசு ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதை கவனத்தில் கொள்ளாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆறு ஆலைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். பல்லடம் பகுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கிய ஐந்து விசைத்தறி கூடங்கள் மற்றும் ஒரு நுால் மில்லுக்கு, வருவாய்த் துறையினர், ‘சீல்' வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், காடா துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, நேற்று முன்தினம், சில தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் தேவராஜ் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், நள்ளிரவு ஆய்வு நடத்தினர். ஐந்து விசைத்தறி கூடங்கள், ஒரு நூல் மில் ஆகியவை, தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, ஆறு ஆலைகளுக்கும், ‘சீல்' வைக்கப்பட்டது. ஆறு ஆலைகளுக்கும், தலா, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...