கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டியில் மர்மமான முறையில் மயில்கள் இறந்துகிடப்பது குறித்து, பொள்ளாச்சி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பணப்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக இன்று பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பணப்பட்டி கிராமத்துக்குச் சென்ற வனப் பணியாளர்கள், அயிலப்ப கவுண்டர் என்பவரின் தோட்டத்தில் ஐந்து பெண் மயில்கள் உட்பட 7 மயில் இறந்து கிடப்பதைப் பார்த்தனர். அதோடு, இறந்து கிடந்த மயில்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், இறந்து கிடந்த மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்த மயில்களின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாக விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.