கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக வால்பாறை கொரோனா சிகிச்சை மையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வால்பாறையில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். வால்பாறையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வால்பாறை அரசு கல்லூரி வளாகத்தில் 150 படுக்கை வசதி கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 32 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், சிகிச்சையின் ஒரு பகுதியாக வால்பாறை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் கார்த்திகேஷ் கவச உடை அணிந்து இயற்கை வைத்திய முறையில் யோகா சிகிச்சை அளித்தார். இதை அனைவரும் ஆர்வமுடன் அவரைப் பின்பற்றி செய்தனர்.