கோவை: கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், வாகனங்கள் மூலம் வீட்டின் வாசலுக்கே வந்து மளிகைப் பொருள் வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கோரி வால்பாறை ஆணையாளரிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 60-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மளிகை காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வால்பாறை நகரத்திற்கு வருகின்றனர். வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வால்பாறை நகரத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று வாகனம் மூலம் மளிகை வியாபாரம் செய்ய வியாபாரிகள் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷிடம் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, நகராட்சி மூலம் வியாபாரம் செய்ய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் வியாபாரிகள் எம்.பி.ஷாஜு, சுரேஷ், பாபுஜி, குசலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.