கிணத்துக்கடவு அருகே முழு ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட மளிகை மற்றும் இறைச்சிக் கடையை பூட்டி அபராதம் விதிப்பு!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட மளிகை மற்றும் இறைச்சிக் கடையை பூட்டி அபராதம் விதித்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட மளிகை மற்றும் இறைச்சிக் கடையை பூட்டி அபராதம் விதித்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் பகுதியில் மளிகை மற்றும் இறைச்சி கடைகளில் கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கொரோனா தடுப்பு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, அப்பகுதிக்கு சென்ற தனிப்படையினர் கடையை முன்பக்கமாக பூட்டிவிட்டு பின்புற வழியாக விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.



இதைத்தொடர்ந்து, கடையில் ஆய்வு நடத்திய தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த தனிப்படையினர் கடையை பூட்டி சாவி எடுத்துக் கொண்டதோடு அபராதமும் விதித்தனர்.



இதேபோல், அப்பகுதியில் கள்ளத்தனமாக செயல்பட்டு வந்த இறைச்சிக் கடையில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்த தனிப்படையினர், இறைச்சி கடையயை பூட்டி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...