கோவை: கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் இயங்கலாமா, வேண்டாமா என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான FOCIA-வின் ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோவையில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் 31.5.20 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். கோவை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற அனைத்து தொழில்களும் வரும் 7.6.2021ஆம் தேதி வரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், கோவையில் மெடிக்கல் சம்பந்தமான உற்பத்தி, விவசாயம் சம்பந்தமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து கோவையில் மேல் கண்ட தொழில்களுக்கு உதிரிபாகங்கள் செய்து வந்த அனைத்து குறு, சிறுதொழிற்சாலை இயக்கமும் நிறுத்தப்பட வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்கின்ற பொழுது அப்படி அறிவிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற தொழிற்சாலைகள் இயக்கலாம் என்றும் அவர்களால் வழி காட்டப்படுகிறது.
மேலும் 1.6.2021ல் மாவட்ட ஆட்சித் தலைவரால் புதிய உத்தரவு வெளியிட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் குறு சிறு தொழில்நிறுவனங்கள் என்ன செய்வது என்று அறியாமல் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். எனவே, மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரையிலும் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக தொழிற்சாலைகள் இயங்குவது சம்பந்தமாக சரியான வழிகாட்டுதல் அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.