காய்கறி வாகனத்தில் கடத்தல் மது பாட்டில்கள்... கைப்பற்றி வழக்குப் பதிந்த கூடலூர் காவல் அதிகாரிகள்..!

நீலகிரி: நீலகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காய்கறி வாகனத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்களைக் கண்டுபிடித்த கூடலூர் காவல் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வழக்குப் பதிந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காய்கறி வாகனத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்களைக் கண்டுபிடித்த கூடலூர் காவல் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வழக்குப் பதிந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் இன்று கூடலூர் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து காந்தல் நோக்கி வந்த காய்கறி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் பொழுது அதில் பிற மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர். அதோடு, அவர்களிடமிருந்து 14.250 லிட்டர் பிறமாநில மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மசனகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை செய்து வருகின்றனர்.



இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான ரவி(28), சரவண செந்தில்(39), அவர்களிடம் இருந்த 38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வந்த வாகனங்கள் (Pick up TN 43 J 9471) கைப்பற்றப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...