கோவை: கொரோனா பாதிப்பை தவிர்க்க வேலை நேரத்தைக் குறைக்க வலியுறுத்தி வால்பாறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்ட பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தேயிலை விவசாயம் என்ற அடிப்படையில் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தேயிலை தோட்ட பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், பல பேர் உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் மதியம் 2 மணியோடு வேலை நிறுத்தக் கோரியும், லாரிகளில் தொழிலாளர்கள் பயணிப்பதை தவிர்க்க கோரியும், தொழிலாளருக்கு பாதுகாப்பு வழங்க முகக்கவசம், கையுறை மற்றும் கைகழுவும் திரவம் வழங்க கோரி வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.