கோவையில் ஆட்டோக்கள் மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்காக ரங்கே கவுண்டர் வீதியில் குவிந்த விநியோகஸ்தர்கள்..!

கோவை: கோவையில் ஆட்டோக்கள் மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்காக விநியோகஸ்தர்கள் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்களை வாங்க குவிந்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோக்கள் மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்காக விநியோகஸ்தர்கள் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்களை வாங்க குவிந்தனர்.

கொரோனா இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மளிகை கடைகள், காய்கறி கடைகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.



இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தள்ளு வண்டிகள், ஆட்டோக்கள் மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்வதற்காக விநியோகஸ்தர்கள் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்களை வாங்கினர்.

அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் மூலம் விநியோகஸ்தர்கள் மளிகை பொருட்களை வாங்க குவிந்ததால் மேலும் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.



அதேபோல, பல்வேறு கடைகளில் அதிக விலைக்கு மளிகை பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்ததால் குறைந்த அளவிலான மளிகை பொருட்களை வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, மளிகை கடை வைத்திருப்பவர்கள் உரிய விலைக்கே மளிகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...