கோவை: கோவை மாநகராட்சி பகுதிக்குள் மளிகைப் பொருட்களை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் வீடுகளுக்கே சென்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக மக்கள் அதிகமாகக் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, வருவாய் பேரிடா் மேலாண்மைத்துறை அரசு ஆணை எண்.391 நாள்.29.05.2021-ல் மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளார்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விற்பனை செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி பகுதிக்குள் மளிகைப் பொருட்களை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் வீடுகளுக்கே சென்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.