கோவை: கோவையில் ஆவின் பாலை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 ஏஜென்சிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலமாக ஆவின்பால் நிறுவனத்திற்கு தேவையான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினசரி 1.80 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் பால்வளத் துறை அமைச்சர்ஆவடி நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது. ஆனால் சில பால் ஏஜென்சிகள் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கோவையின் பொது மேலாளர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் உள்ள 707 பால் ஏஜென்சிகளின் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், சரவணம்பட்டி மற்றும் தடாகம் ரோடு வெங்கிடபுரம் பகுதிகளில் இரண்டு ஏஜென்சிகள் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த 2 ஏஜென்சிகளின் ஒரு மையம் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.