கோவை: திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அனைத்து தோழமை கட்சியின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி கூறுகையில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், குஜராத் மாநிலத்தின் உள்துறை துணை அமைச்சருமான பிரபுல் பட்டேல், லட்சத்தீவினுடைய சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்பு, ஆர்எஸ்எஸின், செயல்திட்டங்களை, லட்சத்தீவில் புகுத்துகின்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் எனவும், இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
என்டிஆர் என்ற பெயரில் புதிதாக, பல்வேறு விதமான சட்டங்களை இயற்றியிருக்கிறார் எனவும் குறிப்பாக கிரைம் ரேட் என்ற அடிப்படையில், குற்றமே இல்லாத கட்சத்தீவில், குற்றவாளிகளை தடுக்கிறோம் என்ற பெயரில், தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு இணையாக ஒரு சட்டத்தை, இயற்றி 10 ஆண்டுகள் தண்டனை வருகின்ற சட்டங்களை இயற்றி வருகின்றதாக கூறினார்.
மேலும், அங்கு இருக்கக்கூடிய பள்ளி குழந்தைகளுக்கு தினமும், மதிய உணவில் மாட்டிறைச்சி தருவதை தடை செய்து, மாட்டிறைச்சியை, வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை என்றும் இப்படி பல்வேறு விதமான வகையில் செயல்பட்டு, லட்சத்தீவினுடைய அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற வகையில், பிரபுல் பட்டேல், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றார் எனவும் இதனை கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பில், இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.