பொள்ளாச்சி: கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மக்களுக்கு வீடுகளில் சந்தைப்படுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து காய்கறி, பழங்கள் தள்ளுவண்டிகள், வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க வியாபாரிகள் வருவாய்த் துறையினரிடம் அனுமதி பெற்று வாகனம் மூலம் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் தணிகைவேல், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், போன் மூலம் பொதுமக்களிடம் ஆர்டர்கள் பெற்று அந்தந்த பகுதிகளுக்கு சென்று விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்யும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.