கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் கிணத்துக்கடவில் மக்கள் ஏமாற்றம்..!

கோவை: கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், கிணத்துக்கடவில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தபட்டது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


கோவை: கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், கிணத்துக்கடவில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தபட்டது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

கிணத்துக்கடவு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசி போட மக்கள் ஆர்வமாக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசியை இருப்பு வைத்து தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...