கோவை: கோவையில் வீடு வீடாக காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கு செல்லும் முன்களப் பணியாளர்களுக்கு, நாளை தடுப்பூசி செலுத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஜூன் 1 ஆம் தேதி 18 வயது முதல் 44 வயதுடையேருக்கு செலுத்த 6 ஆயிரம் தடுப்பூசிகள் கோவை மாவட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசிகளை மாநகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.
வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் அவர்களும் முன்கள பணியாளர்கள் என்பதால் அவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இரண்டாவதாக ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று காய்கறி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடுவருக்கு முக்கியதுவம் கொடுக்க உள்ளதாகபும் தெரிவித்தார். ஏற்கனவே, தொழில் அமைப்பினர் போன்ற நிறுவனங்களுக்கு சென்று பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக நாளை காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் காய்கறி விநியோகம் செய்வோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை எனவும் 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தால், மாநகராட்சியில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 300 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
கூடுதலாக வரும் போது மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் மாவட்டம் முழுவதும் 88 மையங்கள் உள்ளது. போதுமான தடுப்பூசி வரும் போது அனைத்து மையங்களுக்கு தடுப்பூசி அனுப்படும் என தெரிவித்தார்.