கோவை: முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், சத்துணவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை மாவட்ட நிர்வாகம் முன்களப் பணியாளர்களாக நியமித்து பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் சார்பில் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சத்துணவு பணியாளர்கள் முன் கன பணியாளர்களாக நியமித்து வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, முகக்கவசம், கையுறை, சானிடைசர் போன்ற நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மரணம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். ஊக்கத் தொகையாக ரூ 15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மாவட்டத் தலைவர் சிவசாமி, மாவட்ட செயலாளர் நவமணி தேவி, பொருளாளர் மஞ்சுளா பாய் உள்ளிட்ட நிர்வாகிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.