கோவை: கோவை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், நல்லி கவுண்டன் பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் சாராயம் விற்ற வாலிபரை கைது செய்தனர்.

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை அருகே உள்ள நல்லி கவுண்டன் பாளையம் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டதில் அதில் சுமார் ஒரு லிட்டர் அளவு கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். சுல்தான் பேட்டை போலீஸார் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.