கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், கோவையில் ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதர தேவைகளுக்கு செல்பவர்கள் இ-பதிவு செய்வது அவசியம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சிலர் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாகவும் காய்கறி வாங்க மார்கெட் செல்வதாகவும் கூறும் நபர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். இ-பதிவு செய்து வெளியே வரும் வாகன ஓட்டிகளை ஆவணங்களை சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபகுமார் மற்றும் போலீஸார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், ஆர்.எஸ்.ரோடு, கோவில்பாளையம், தாமரைக்குளம், வீரப்ப கவுண்டனூர், சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது, ‘‘கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனை மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே வருகின்றனர். முழு ஊரடங்கில் வெளியே வருவதால் கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். வாக்கிங் செல்வதைத் தவிர்த்து, முகக்கவசம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்றனர்.