வால்பாறை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக சவரத் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் போன்ற பொருள் உதவி வழங்கினர்.

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகள் திறக்காமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக வால்பாறையில் உள்ள 50க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கினர்.

இதில் 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி பொருட்கள் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் கோவை மாவட்டத் தலைவர் இருகூர் உதய பூபதி, கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் பிரதீப், பொள்ளாச்சி நகர தலைவர் முத்துவீரன், செயலாளர் முருகன், வால்பாறை நகர தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சிவா, பொருளாளர் காளிதாஸ், ராஜ்குமார், தேவராஜ், சுப.வர்கீஸ், வின்சென்ட், பாண்டி மற்றும் வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, வர்த்தக அணி பாஸ்கர், நகர துணைத்தலைவர் செந்தில் போன்றவர் கலந்துகொண்டு உதவிப் பொருட்களை வழங்கினர்.