ஒரே வாரத்தில் 1,524 லிட்டர் வெளிமாநில மதுபானம் பறிமுதல், 42 குற்றவாளிகள் கைது - டிஜிபி சைலேந்திர பாபு நடவடிக்கை

கோவை: கோவை உட்பட தமிழகம் முழுவதும் இரண்டு வார தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து ரயில் மூலமாக மதுபான கடத்தி வரப்படுவதாக தகவல் வந்ததையொட்டி ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, ஐபிஎஸ், உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.


கோவை: கோவை உட்பட தமிழகம் முழுவதும் இரண்டு வார தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து ரயில் மூலமாக மதுபான கடத்தி வரப்படுவதாக தகவல் வந்ததையொட்டி ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு, ஐபிஎஸ், உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல், ரயில் இருப்புப்பாதை காவல் நிலையங்களில் இரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இரயில் மூலம், மாநிலங்களுக்கு இடையே மதுபானம் கடத்தி வரும் கும்பலை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் நடத்தி வந்தனர்.

இந்த சிறப்பு கண்காணிப்பின் முடிவில், 50 கடத்தல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 42 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றவாளிகளிடம் இருந்து 1,524.25 லிட்டர் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள், அந்தந்த மாவட்ட மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சிறப்பு காவல் துறை படையினரை, டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். மேலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், பொது மக்களின் நலன் கருதி, 1512 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனவும், 9962500500 என்ற கைப்பேசி எண்ணுக்கு அழைத்து குற்றச் சம்பவங்கள் குறித்த தகவலை தெரிவிக்கலாம் என ரயில்வே காவல் துறை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்கள், அனைத்து ரயில் நிலையம் மற்றும் ரயில் பெட்டிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...