கோவையில் வடமாநில வாலிபர்களால் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது..!

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கைத் தொடர்ந்து பெரும்பாலான வடமாநில வாலிபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். ஆனால், இன்னும் ஊருக்குச் செல்லாமல் உள்ள வாலிபர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில் 7 பேராக சேர்ந்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக வருவதால், தொற்று பரவல் அதிகரித்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கைத் தொடர்ந்து பெரும்பாலான வடமாநில வாலிபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். ஆனால், இன்னும் ஊருக்குச் செல்லாமல் உள்ள வாலிபர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில் 7 பேராக சேர்ந்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக வருவதால், தொற்று பரவல் அதிகரித்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் அருகே வடமாநில வாலிபர்கள் தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஊரடங்கை ஒட்டி பலர் வடமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். பலர் அந்தத் தனியார் நிறுவனங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சுந்தராபுரம் பகுதியில் கொத்துக்கொத்தாகத் திரிந்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் காற்றில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் கட்டுப்படுத்த கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு வாகனப் போக்குவரத்து எதுவுமின்றி முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து காணப்படுகிறது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வடமாநில வாலிபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். ஆனால், இன்னும் ஒரு சிலர் ஊருக்குச் செல்லாமல் அப்பகுதியில் தங்கி இருக்கின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் 7 பேராக சேர்ந்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக வருவதைக் காணமுடிகிறது. இதனால் பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்த நிலையில் உள்ளனர். பல்வேறு சமூக ஆர்வலர்களும் உறுப்பினர்களும் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். கோவை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து கூட்டமாக சுற்றித்திரியும் வடமாநில இளைஞர்களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தொற்று விகிதத்தை குறைக்க முடியும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...