கோவையில் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நெகிழ்ந்து மகிழ்ந்த மக்கள்..!

கோவை: கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் பல்வேறு வார்டுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், டாக்டர்கள் வேண்டாம் என்று அறிவுறுத்தியபோதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, கொரோனா நோயாளிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


கோவை: கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் பல்வேறு வார்டுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், டாக்டர்கள் வேண்டாம் என்று அறிவுறுத்தியபோதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, கொரோனா நோயாளிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தது. தமிழக அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களாகவே தொற்றின் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் நேற்று மு.க.ஸ்டாலின், தானே களத்தில் இறங்கி கொரோனா தடுப்புப் பணிகளை நேரில் பார்த்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது, அவர் கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் பல்வேறு வார்டுகளை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் அதிகாரிகளிடம், ‘‘இங்கு கொரோனா வார்டு எங்கு உள்ளது. நான் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளை சந்திக்க வேண்டு''மெனக் கேட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகளும் டாக்டர்களும் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். டாக்டர்கள், ‘‘அங்கு செல்ல வேண்டாம்'' என அறிவுரை வழங்கினர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு பி.பி.இ. கிடைத்தன. அதனை அணிந்து கொண்டு அங்கு உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா வார்டு, சாதாரண வார்டு என அனைத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? குறைகள் இருந்தால் தன்னிடம் சொல்லுங்கள் எனக் கேட்டார். தங்களை முதலமைச்சர் பார்க்க வந்திருப்பதாக அறிந்த நோயாளிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் முதலில் முதலமைச்சரிடம், ‘‘நீங்கள் எங்களைப் பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நெகிழ்ந்து கூறினர். இது போன்று எந்த முதலமைச்சரும் நேரடியாக நோயாளிகளை சந்தித்தது கிடையாது. ஆனால், நீங்கள் உங்கள் உயிரை துச்சமென நினைத்து எங்களுக்கு ஆறுதல் கூற வந்தது மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நன்றாக சிகிச்சை அளிக்கிறார்கள்'' என்றனர்.

கொரோனா பரவியதில் இருந்து எந்த ஒரு முதலமைச்சரும் நேரடியாக சென்று நோயாளிகளை சந்தித்தது கிடையாது. இதுவே முதல் முறை என்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் சென்று நோயாளிகளைப் பார்த்தது டிவிட்டர் பக்கத்தில் ஹாஷ்டாக் ஆக பதிவாகி ஒரு கோடிக்கு மேல் மக்கள் வாழ்த்துகளைக் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...