கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த ஜனவரியில் இருந்து அனைத்து மண்டலங்களிலும் சுமார் 400 திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு உரிய பில் தொகையை வழங்காமல் நிறுத்தி விட்டது. இதனால், ஒப்பந்த நிறுவனங்கள் இடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. கடந்த ஜனவரியில் இருந்து அனைத்து மண்டலங்களிலும் சுமார் 400 திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு உரிய பில் தொகையை வழங்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக வார்டு மற்றும் மண்டல அளவில் நடந்த சிவில் பணிகள், குடிநீர் குழாய் பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, ரோடு, பாலம், சாக்கடை வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் போன்றவற்றிற்கான தொகையை முழுமையாக வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்த பின்னர் வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்ட நீண்டகால பில் நிலுவை தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டப் பணிகளுக்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்த ஒப்பந்த நிறுவனங்கள் பில் பாக்கியால் தவிப்பு அடைந்துள்ளன. கடந்த 5 மாதத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சுமார் 80 கோடி ரூபாய் பில் பாக்கி வைத்து இருப்பதாக தெரிகிறது. தொகை கைக்கு வராத நிலையில் திட்டப் பணிகளை நடத்தி வரும் ஒப்பந்த நிறுவனங்கள் பணிகளை நிறுத்தி வைத்துவிட்டது.
குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளும் முடக்கப்பட்டது. பில் பாக்கியை கொடுத்தால், பணிகளை செய்வோம். இல்லாவிட்டால், பணிகளை நடத்த மாட்டோம் எனக்கூறி ஒப்பந்த நிறுவனங்கள் அடம் பிடித்து வருகிறது.
இந்தநிலையில், கோவை மாநகராட்சி பொது ஒப்பந்ததாரர்கள் சங்கம், ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக 2 கோடி ரூபாய் சமீபத்தில் வழங்கப்பட்டது. நிதி கொடுத்த சங்கத்தினர் பில் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், குறிப்பிட்ட சில ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் பில் பாக்கியை கொடுத்துவிட்டு இதர நிறுவனங்களுக்கு பில் தொகை வழங்காமல் நிறுத்தி வைக்க மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது ஒப்பந்த நிறுவனங்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘நிதி பற்றாக்குறையாக இருக்கிறது. கொரோனா தடுப்புப் பணிகளுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிலுவை தொகை வழங்கப்படும்'' என்றனர்.