கிணத்துக்கடவில் முழு ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் உலா வந்தவர்களுக்கு அபராதம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள நிலையில், கிணத்துக்கடவில் முழு ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் உலா வந்த நபர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள நிலையில், கிணத்துக்கடவில் முழு ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் உலா வந்த நபர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு நாளில் தேவையின்றி வாகனங்களில் உலா வரும் நபர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிப்பதோடு வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது.



ஆனால், கிணத்துக்கடவில் தொடர்ந்து மக்கள், தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும் கார் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி இ-பாஸ் இருக்கிறதா எனவும் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...