கோவை: வால்பாறையில் படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் ஸ்டான் மோர் சாலையில் படகு இல்லம் அமைக்கப்பட்டு உள்ளது. அவசரகதியில் துவக்கப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில், வால்பாறை நகர், காமராஜ் நகர், காந்தி நகர், புது மார்க்கெட், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள், குப்பைகள் படகு இல்லத்தில் சேர்கிறது.

தற்பொழுது காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வரும் கழிவுநீர் குப்பைகள் அனைத்தும் படகு இல்லத்தில் சேருகிறது.
மேலும் படகு இல்லத்திற்காக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை உடனடியாக திறந்து வெளியேற்றும் படியும், படகு இல்ல பகுதிக்கு கழிவுநீர் வராதவாறு மாற்று ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.