கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின்‌ உடல்களை ஈஷா மயானங்களில்‌ அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம்‌ செய்யலாம் என அறிவிப்பு!

கோவை: ஈஷா மயானங்களில்‌ கொரோனாவால்‌ காலமானவர்களை இலவசமாக தகனம்‌ செய்யலாம்.


கோவை: தமிழ்நாட்டில் ஈஷாவின்‌ பராமரிப்பின்‌ கீழ்‌ இயங்கும்‌ 18 மயானங்களில்‌ கொரோனாவால்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம்‌ செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக, ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள பதிவில், "ஈஷா மயானங்கள்‌, கொரோனா தொற்றால்‌ காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும்‌. இந்த உயிர்‌ கொல்லி வைரசுக்கு

அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய்‌ இருக்க விரும்புகிறோம்‌” என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பதிவு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌, சுகாதாரத்‌ துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ மற்றும்‌ தமிழக சுகாதாரத்‌ துறை ஆகியோருக்கு டேக்‌ செய்யப்பட்டுள்ளது.



ஈஷா சார்பில்‌ கோவையில்‌ 12 மயானங்கள்‌, சென்னையில்‌ 4, நாமக்கல்‌ மற்றும்‌ நெய்வேலியில்‌ தலா ஒன்று என மொத்தம்‌ 18 மயானங்கள்‌

பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...