கோவை: வால்பாறையை அடுத்துள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக் கோரி, அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலையைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது கருமலை தேயிலைத் தோட்டம் இதன் ஒரு பகுதியாக உள்ளது காஞ்சமலை தேயிலைத் தோட்டம். இங்கு சுமார் 500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்று அங்கு குடியிருப்பு பராமரிப்பு அடிப்படை வசதிகள், மருத்துவம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த தொழிற்சங்க கூட்டுக் குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடமும் தொழிலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்படி, கொரோனா காலத்தில் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்குதல், கை கழுவும் திரவம் வழங்குதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், குடியிருப்புகளைப் பராமரித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் கழித்து தொழிலாளர்கள் பணிக்குச் சென்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் திமுக தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் கலந்து கொண்டார்.