கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.16 மற்றும் வார்டு எண்.17 வடவள்ளி, முல்லை நகர் ஆகிய பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் குறித்தும், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் பணிகள் குறித்தும், தெர்மா மீட்டர் மூலம் வெப்ப அளவினை கண்டறியப்படும் பணிகள் குறித்தும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னா், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் மேட்டுபாளையம் சாலையில் அமைந்துள்ள மொத்த காய்கறி கொள்முதல் மார்க்கெட்டில் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் அந்தந்த பகுதிகளுக்கு காய்கறிகள் பிரித்து அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருவதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவ ராவ் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை ஆணையர் ச.மதுராந்தகி அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல செயற்பொறியாளர் சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பாாவையாளா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.