பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கிராமத்தில் 220 பேருக்கு தொற்று உறுதி - தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு!

கோவை: பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் இதுவரை 220 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் இதுவரை 220 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதில் பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரண்டாம் அலையில் 220 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கிராமத்தில் இரண்டாம் அலையில் மட்டும் 19 பேர் தொற்றால் இதுவரை இறந்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம் அவித்துள்ளது.



மேலும், இந்த கிராமத்தில் அதிக அளவில் வெளிநபர்கள் உள்ளே வருவதால் கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளி நபர்கள் கிராமத்திற்குள் வராத படியும், கிராம மக்கள் வெளியே செல்லாத படியும் தடை செய்யப்பட்ட பகுதியாக கிராமம் அறிவிக்கப்பட்டு, நான்கு பகுதிகளில் உள்ள வழித்தடங்களை தகர சீட்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தொற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...