கோவை: ஊரடங்கு உத்தரவுக்கு விதிவிலக்கு என்பதுபோல் சேரன்மாநகர் குடியிருப்புப் பகுதியில் காய்கறி, பூக்கடை வழக்கம்போல் இயங்கியது. போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் காலை-மாலை இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் வழக்கம் போல் பயணித்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சரிவர பின்பற்றப்படுவதில்லை. இதனால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் குடியிருப்புப் பகுதி. இங்கு ஏ, பி, சி என 3 பிரிவுகளில் மொத்தம் 568 வீடுகள் உள்ளன. இதுதவிர, சேரன் மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் பல ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவு நகர்ப்பகுதிகளில் தீவிரமாக அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விதிமீறல் அதிகம் காணப்படுகிறது.
இதுகுறித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் (Consumer Awareness and Protection Association) தலைவர், ரவிசங்கர், 'சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகள் மாநகராட்சி 32வது வார்டுக்குட்பட்ட பகுதிகளாகும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சேரன்மாநகர் குடியிருப்புப் பகுதிகளில் விதிமீறல்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மட்டும் அவற்றைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், சேரன்மாநகர் குடியிருப்புப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்கறி கடைகள் வழக்கம்போல் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தவிர, பூ மற்றும் மாவு விற்பனை என்ற பெயரில் பகிரங்கமாக ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதுதவிர, சேரன்மாநகர் கடைசி பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மளிகைக் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
தினமும் காலை முதல் மாலை வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் வழக்கம் போல் வெளியே சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் நான்காவது ஸ்டாப், ஐந்தாவது ஸ்டாப், மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பேக்கரி கடைகள் அடைக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில், அதன் முன்புறம் டீ மற்றும் ஸ்நாக்ஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கம்போல் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கடைகளின் முன் அமர்ந்து ஹாயாக டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட்டு கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதுதவிர, பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங் என்ற பெயரில் ரோடு மற்றும் பொது இடங்களில் வழக்கம்போல் சென்று வருகின்றனர்.

சேரன்மாநகர் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படும் இத்தகைய விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, காவல்துறை சார்பில் செக்போஸ்ட் அமைத்து சேரன்மாநகர் குடியிருப்புப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொண்டால் இங்கு நடக்கும் விதிமீறல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ள அரசின் நோக்கமே சேரன்மாநகர் பகுதியில் மக்களின் அலட்சியத்தால் பயனற்றதாக மாறியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை' என்று கூறினார்.