நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் வெடிப் பொருள் வெடித்து கண்ணன்(30), அபு(25), ஸ்ரீ(10) உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மூன்று பேரையும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், பூட்டியிருந்த வீட்டில் கண்ணன், அபு ஆகிய இருவர் வெடிமருந்துகளைக் கம்பிகளைக் கொண்டு நாட்டு வெடி குண்டு தயாரித்துக் கொண்டிருந்தனர். பாதியளவு தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டிற்கு வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ என்ற 10வயது சிறுவனும் படுகாயமடைந்தான். காயமடைந்த மூன்று பேரும் குன்னூர் அரசு லாலி மருததுவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வெடிப்பொருட்கள் மீது கம்பிகள் சுற்றப்பட்டுள்ளதால், காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் ஆய்வாளர் பிருதிவிராஜ் ஆகியோர் கண்ணன் மற்றும் அபு ஆகியோரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.